உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.5.53 கோடியில் பணிகள் பள்ளிக்கரணையில் துவக்கம்

ரூ.5.53 கோடியில் பணிகள் பள்ளிக்கரணையில் துவக்கம்

பள்ளிக்கரணை, பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில், 5.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் நேற்று துவக்கி வைத்தார்.அதில், 5.24 கோடி ரூபாயில், 55 உட்புற சாலைகள் சீரமைக்கும் பணிகளும், 29 லட்சம் ரூபாயில், 1,135 ச.அடி பரப்பளவில், சுகாதார மைய கட்டடம் அமைக்கும் பணியும் அடங்கும் என, அதிகாரிகள் கூறினர்.நாரயணபுரத்தில், காலை 11:45 மணிக்கு சாலை பணிக்கும், காமகோட்டி நகர் 6வது தெருவில், காலை 11:55 மணிக்கு சுகாதார மையம் கட்டுமானப் பணிக்கும் பூமி பூஜை போடப்பட்டது.இந்நிகழ்வில், மாநகராட்சி உதவி கமிஷனர் முரளி - பொறுப்பு, உட்பட்ட அதிகாரிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை