உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  உலக புற்று நோய் தினம் மாணவர்கள் பதாகை எந்தி விழிப்புணர்வு  

 உலக புற்று நோய் தினம் மாணவர்கள் பதாகை எந்தி விழிப்புணர்வு  

ராயப்பேட்டை பிப். 4- உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பதாகை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனை அருகில், நேற்று ரெட் கிராஸ் மாணவர்கள் பதாகை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கூறியதாவது; குணப்படுத்த முடியாத நோயாக புற்று நோய் உள்ளது. புகையிலை சிகரெட் உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை அறவே கைவிட வேண்டும். சுற்று சூழல் மாசடைந்து உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் எந்தவித பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்று நோய் வருகிறது. இதனால் நோயில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ