உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யு - 13 கிரிக்கெட் போட்டி யார்க்கர் அணி த்ரில் வெற்றி

யு - 13 கிரிக்கெட் போட்டி யார்க்கர் அணி த்ரில் வெற்றி

சென்னை, 'லிட்டில் ஸ்டார்ஸ்' கிரிக்கெட் அகாடமி சார்பில், 'ஓ.சி.எப்., யு - 13' எனும் தலைப்பில், அகாடமிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, ஆவடியில் நடக்கிறது.போட்டியில், 13 வயதிற்கு உட்பட்ட லிட்டில் ஸ்டார்ஸ், எஸ்.பி.ஆர்., சி.ஏ., - யுனிவர்சல், யார்க்கர், பைன் ஸ்டார், ரைசிங் ஜவான்ஸ், ஆல்ப்ரட் உட்பட இரு பிரிவிலும், தலா ஐந்து அகாடமி அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் போட்டியை, ஓ.சி.எப்., எனும் ஆயுதப்படை ஆடை தொழிற்சாலையின் பொது மேலாளர் ரெட்டி துவங்கி வைத்தார்.முதல் போட்டியில் யார்க்கர் அணி, 30 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு, 171 ரன்கள் அடித்தது. அடுத்து பேட் செய்த லிட்டில் ஸ்டார்ஸ் அணி, 30 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. யார்க்கர் அணி வீரர் கவிவேல் அமுதன், 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட் சாய்த்தார்.மற்றொரு போட்டியில் யுனிவர்சல் சி.ஏ., அணி, 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 134 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய, எஸ்.பி.ஆர்., சி.ஏ., அணி, 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து, 136 ரன்கள் அடித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை