உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிச.,31க்குள் விண்ணப்பிக்கலாம்

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிச.,31க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை:பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள், டிச.,31க்குள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பு:பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை மற்றும் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான சான்று. குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெறலாம். குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து, கட்டணம் இன்றி பதிவு செய்யலாம். தாமதமானால், கால தாமத கட்டணமாக, 200 ரூபாய் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில், 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன், மண்டலங்களில் உள்ள பிறப்பு, இறப்பு பிரிவில், டிச., 31க்குள் விண்ணப்பித்து, பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்; மீண்டும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ