உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெல்லை போத்தீஸ் கடையில் தள்ளுபடியில் நகை வாங்கலாம்

நெல்லை போத்தீஸ் கடையில் தள்ளுபடியில் நகை வாங்கலாம்

சென்னை:ஆடிப்பெருக்கிற்கு, நெல்லை போத்தீஸ் சொர்ணமஹால் நகைக் கடையில், சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நெல்லை போத்தீஸ் நிறுவனத்தின் அறிக்கை: அம்மனுக்கு விசேஷமான ஆடி மாத சலுகையாக சீனிவாச கல்யாணம், மீனாட்சி கல்யாண கலெக் ஷன்களுக்கு, சேதாரத்தில், 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. வைர நகைகளுக்கு காரட்டுக்கு, 12,000 ரூபாய்; 100 சதவீதம் நேச்சுரல் சாலிடர் வைரத்திற்கு, 30 சதவீதம் வரை தள்ளுபடி; பிளாட்டினம் நகைகளுக்கு செய்கூலியில், 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. பழமையான வெள்ளி பொருட்களுக்கு, செய்கூலியில் 50 சதவீதம், எம்.ஆர்.பி., வெள்ளி நகைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. கொலுசுகளுக்கு செய்கூலி கிடையாது. வெள்ளியில் விதவிதமாக அம்மன் முகம் மற்றும் பூஜை பொருட்களும் கிடைக்கும். இச்சலுகை, ஆடி மாதம் முழுதும் பொருந்தும். ஆடிப்பெருக்கு, ஆக., 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி, ஒரு சவரனுக்கு, 5,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த நாளின் விலை அல்லது ஆடிப்பெருக்கு நாளில் விலை எது குறைவோ, அதில் நகையை பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவு, ஆக., 1ம் தேதி துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை