60 வயது நபருடன் விடுதியில் தங்கிய இளம்பெண் மரணம்
வேளச்சேரி:சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் ஜோதி, 60. இவரும், வில்லிவாக்கத்தை சேர்ந்த ரம்யா, 27, என்பவரும், வேளச்சேரியில் உள்ள சாய்ரமேஷ் என்ற விடுதியில், நேற்றுமுன்தினம் அறை எடுத்து தங்கினர். நேற்று காலை, அறையில் ரம்யா மயங்கி விழுந்து பலியானார். வேளச்சேரி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரம்யாவுக்கு திருமணமாகி 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவர் பிரிந்து சென்று விட்டார். ஜோதிக்கு, ரம்யாவின் தாயார் சசிகலாவுடன் பழக்கம் இருந்துள்ளது. சில ஆண்டுகளாக, ரம்யாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, அடிக்கடி இருவரும் வெளி இடங்களில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு, இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக, ஜோதி போலீசிடம் கூறி உள்ளார். பிரேத பரிசோதனை முடிவு வந்தபின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் கூறினர்.