உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி செய்த வாலிபர் 6 மணி நேரத்தில் கைது

வழிப்பறி செய்த வாலிபர் 6 மணி நேரத்தில் கைது

சென்னை :மூதாட்டியிடம், 6 கிராம் கம்மலை பறித்துச் சென்றவரை, ஆறு மணி நேரத்தில் பிடித்து, நொளம்பூர் போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி, 72. நேற்று முன்தினம் காலை 6:15 மணிக்கு, கடையில் பால் வாங்கி, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர், திரிபுரசுந்தரி காதில் அணிந்திருந்த, 6 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டிக்கு, மருத்துவமனையில் காதில் மூன்று தையல்கள் போடப்பட்டன. சம்பவம் குறித்து, மூதாட்டியின் பேரன் கவுசிகன், 25, காலை 10:00 மணிக்கு நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்தனர். இதை வைத்து, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஆசிப் பாஷா, 29, என்பவர் மூதாட்டியிடம் கம்மலை பறித்தது தெரிந்தது. மதியம், 12:00 மணிக்கு, அவர் வீட்டில் இருந்த ஆசிப் பாஷாவை, போலீசார் கைது செய்து, கம்மலை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளியை கைது செய்து நகையை மீட்டு கொடுத்த நொளம்பூர் போலீசாரை, கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை