உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் வழிப்பறி வாலிபர் கைது

பெண்ணிடம் வழிப்பறி வாலிபர் கைது

சென்னை, தேனாம்பேட்டை, எம்.கே.ராதா நகர், எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் தேவிகா, 38. கடந்த 28ம் தேதி, தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, கையில் உருட்டு கட்டையுடன் வந்த மர்மநபர், தேவிகாவை வழிமறித்து, ஆபாசமாக பேசி மிரட்டி கையிலிருந்த மணி பர்சை பறித்து தப்பினார்.இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 25, என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 150 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !