கோகைன் விற்ற வாலிபர் கைது
சென்னை, அமைந்தகரை, ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, அமைந்தகரை போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, சந்தேகிக்கும் வகையில் நின்றவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடைமைகளை, சோதனை செய்தனர். அதில், 49 கிராம் கோகைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. பிராட்வே பகுதியைச் சேர்ந்த அமிருதீன், 36, என்பதும், வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 49 கிராம் கோகைன், இரு மொபைல் போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.