உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

புழல்,மேற்கு மண்டல காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து, பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் சத்தம் போடவே, சக பயணியர் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.புழல் மகளிர் போலீசாரின் விசாரணையில், புழல், காவாங்கரை பாரதியார் தெருவைச் சேர்ந்த தினேஷ், 29, என்பது தெரியவந்தது. அவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

அடையாறு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, கடந்த 4ம் தேதி மாயமானார். வேளச்சேரி போலீசாரின் விசாரணையில் நங்கநல்லுாரைச் சேர்ந்த அனில் குமார், 26, என்பவர், மாணவியை காதலித்து கடத்திச் சென்றதாகவும், இருவரும் திருச்சியில் இருப்பதும் தெரியவந்தது.போலீசார் அங்கு சென்று, நேற்று இருவரையும் வேளச்சேரிக்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்தனர். இதில், அனில் குமார் பாலியல் உறவு கொண்டதாக தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அனில் குமார் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை