கார்கள் மீது கல் எறிந்த வாலிபர் கைது
சென்னை, அரும்பாக்கம் பகுதியில், நேற்று இரவு வடமாநில இளைஞர் ஒருவர், மது போதையில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு, கற்களை எடுத்து, அந்த வழியே சென்ற கார்களை தாக்கினார். இதில், காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரின் காரும் சேதமாகியது.இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாக்கம் போலீசார், அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ராகுல், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.