உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலர் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை முயற்சி

காவலர் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை: புதுப்பேட்டை, காவலர் குடியிருப்பில் மூன்றாவது தளத்திலிருந்து குதித்ததில், படுகாயமடைந்த வாலிபர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புதுப்பேட்டை, எல்.ஜி., சாலையில் நரியங்காடு காவலர் குடியிருப்பு உள்ளது. நேற்று காலை, வாலிபர் ஒருவர், மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் ஜான், 21, என்பது தெரிய வந்தது. காவலர் குடியிருப்பிற்கு எதற்கு வந்தார், எதற்காக மாடியில் இருந்து குதித்தார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை