உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ் முன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

போலீஸ் முன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

- பெரம்பூர்: பெரம்பூர், குமாரசாமி தெரு பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 38, தன் மாமியார் மாரியம்மாளுக்கு கடனாக 1 சவரன் நகை மற்றும் 12,000 ரூபாய் தந்துள்ளார். அதை அவர், திருப்பி தராததால், செம்பியம் போலீசில் இம்மாதம் 4ல் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காதாதல், காவல் நிலையம் முன், நேற்று முன்தினம் இரவு, தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரிக்கின்றனர். -- தாலி செயின் திருடிய வாலிபர் கைது திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த சஜீனா பேகம், 23, என்பவர் வீட்டில் 3.5 சவரன் தாலி செயின், வெள்ளி கொலுசுகள், 10,000 ரூபாய் ஆகியவற்றை, ஆக., 28ம் தேதி, மர்ம நபர் வீடு புகுந்து திருடினார். திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட அதே பகுதி லோகநாதன், 24, என்பவரை, நேற்று கைது செய்தனர். திருடிய பொருட்களை விற்று கிடைத்த பணம், ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை