உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தடுப்பில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

தடுப்பில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவொற்றியூர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஜலாலுதீன் சித்திக், 24, மினோஜயா, 24. இருவரும், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.இருவரும், திருவொற்றியூர், சுங்கச்சாவடியில் இருந்து, தியாகி சத்தியமூர்த்தி நகர் நோக்கி, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர்.எண்ணுார் விரைவு சாலையில், மஸ்தான் கோவில் சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த, 'யமஹா ஆர்15' பைக், இவர்களது பைக்கில் மோதியது. அதேவேகத்தில் சாலை மைய தடுப்பிலும் மோதியது. இதில், பைக்கை ஓட்டி வந்த கொருக்குபேட்டை, ரயில்வே காலனியைச் சேர்ந்த ரூபன், 18, என்பவர், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.திருவொற்றியூர் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த உ.பி., வாலிபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் குறித்து, தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ