மேலும் செய்திகள்
பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
06-Jul-2025
தண்டையார்பேட்டை, குப்பை லாரியை பைக்கில் முந்த முயன்ற வாலிபர், முன்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார். தண்டையார்பேட்டை, கைலாச நகரைச் சேர்ந்தவர் பாபு, 45; குப்பை லாரி டிரைவர். இவர் நேற்று தண்டையார்பேட்டையில் இருந்து குப்பையை சேகரித்து கொண்டு, மணலி நெடுஞ்சாலை, எழில் நகர் மேம்பாலம் வழியாக வந்தார். அப்போது, தண்டையார்பேட்டை, கைலாசநாதர் தெருவைச் சேர்ந்த கணேஷ், 25, என்பவர், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரது பின்னால், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாரத், 22, என்பவர் அமர்ந்திருந்தார். குப்பை லாரியை கணேஷ் முந்த முயன்றபோது, லாரியின் முன்சக்கரத்தில் சிக்கி கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுபுறம் சரிந்த பாரத், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இது குறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Jul-2025