உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மீது பைக் மோதி முடிச்சூரில் வாலிபர் பலி

லாரி மீது பைக் மோதி முடிச்சூரில் வாலிபர் பலி

முடிச்சூர், மறைமலை நகர், ஜான்சி ராணி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கீர்த்திராஜன், 34. பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில், விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பல்சர் இருசக்கர வாகனத்தில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வீட்டிற்கு சென்றார்.முடிச்சூர் ஏரி அருகே சென்ற போது, முன்னாள் சென்ற லாரி ஓட்டுனர், திடீரென சாலையின் இடது புறமாக வந்து பிரேக் போட்டு நிறுத்தினார்.அப்போது, பின்னால் சென்ற கீர்த்திராஜன், கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்பக்கத்தில் மோதினார். இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது தொடர்பாக, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுநரான கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டியன், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி