விளையாடும்போது இளைஞர் திடீர் பலி
திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருகொளத்துார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; எல்.ஐ.சி., முகவர். இவரது மனைவி ரேணுகா, 26.மணிகண்டன், நேற்று மதியம், நத்தம்மேட்டில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். நண்பர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.