கபடி விளையாடி காயமடைந்த வாலிபர் பலி
அம்பத்துார், அம்பத்துார், அத்திப்பட்டு, சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், 27. இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.சில மாதங்களுக்கு முன், நண்பர்களுடன் இணைந்து, அதே பகுதியில் கபடி விளையாடி உள்ளார். அப்போது கீழே விழுந்ததில், தலையில் உள்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவ்வப்போது காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.உறவினர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.