உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா தகராறில் வாலிபர் கொலை

கஞ்சா தகராறில் வாலிபர் கொலை

மறைமலை நகர்: செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த 'யமஹா எப் இசட்' பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த சரவணன், 20, என, தெரிந்தது.சரவணனும், சிங்கபெருமாள் கோவில், தெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பிரவீன், 26, என்பவரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். பணம் பங்கு பிரிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட பிரச்னையில் பிரவீன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக ஆறு பேரை கைது செய்த போலீசார் பிரவீனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ