உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு

காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு

சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 30. இவர், நேற்று இரவு ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர், திடீரென காவல் நிலையம் முன், உடலில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொண்டார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ