மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
13-Oct-2025
எண்ணுார்: எண்ணுார், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஷியாம், 19; தனியார் நிறுவன ஊழியர். தோல் நோயால் அவதிப்பட்ட ஷியாம், சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். எண்ணுார் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். சில தினங்களுக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார், 31 என்பவர், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஷியாமின் தம்பி சஞ்சய் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
13-Oct-2025