உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் செயின் பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் செயின் பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த கீர்த்திகா என்பவர், 2022 ஏப்., 24ல் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், கீர்த்திகா அணிந்திருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெய்வேலி மந்தாரகுப்பத்தைச் சேர்ந்த திவாகர், 26, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், திவாகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை