மேலும் செய்திகள்
பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
23-Apr-2025
காசிமேடு, ஏகாசிமேடு, புதுமனைகுப்பத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார், 40; பால் வியாபாரி. இவர், கடந்த 23ம் தேதி, காசிமேடு, சூரிய நாராயணன் சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரது சட்டைப் பையில் இருந்த மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து, காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.அதில், திருவொற்றியூர், தாங்கல் பகுதியை சேர்ந்த கரிமுல்லா, 23, கண்ணகி நகரை சேர்ந்த அஜய், 22, சிவா, 24, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, கரிமுல்லா, அஜய்யை, நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சிவாவை தேடி வருகின்றனர்.
23-Apr-2025