உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரியாணி கரண்டியால் வாலிபரின் மண்டை உடைப்பு

பிரியாணி கரண்டியால் வாலிபரின் மண்டை உடைப்பு

செம்பியம், அக். 1--வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம், 30. இவர், பெரம்பூரில் உள்ள தன் நண்பரது தாத்தாவின் காரிய நிகழ்வில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அந்நிகழ்விற்கு, பெரம்பூர், மடுமா நகரைச் சேர்ந்த திலீப்குமார், 46, என்பவரும் வந்துள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர்; அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த திலீப்குமார் அங்கிருந்த பிரியாணி கரண்டியால், அப்துல் ரஹீமின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்துல் ரஹீமை அங்கிருந்தவர்கள் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில், 15 தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், திலீப்குமாரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை