உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உலக சிலம்ப போட்டியில் யுத்த வர்ம அணி சாதனை

உலக சிலம்ப போட்டியில் யுத்த வர்ம அணி சாதனை

திருவொற்றியூர், உலக அளவிலான சிலம்ப போட்டியில், யுத்தவர்ம சிலம்ப போர்க்கலை அகாடமி மாணவர்கள், 14 தங்கம் உட்பட 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். மலேஷிய நாட்டின் சிரம்பன் நகரத்தில், ஆக., 8, 9ல், மலேஷியா போர்க்கலை சிலம்பம் அகாடமி சார்பில், உலக அளவிலான சிலம்ப போட்டிகள், தனித்திறமை மற்றும் சண்டை பயிற்சி ஆகிய இருபிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில், இந்தியா, இலங்கை, அபுதாபி, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இந்தியா சார்பில், சென்னை திருவொற்றியூரின் யுத்தவர்ம சிலம்ப போர்க்கலை அகாடமி சங்கத்தைச் சேர்ந்த, 11 மாணவ - மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் முடிவில், 14 தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண் கலம் என, 22 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியனில் இரண்டாம் இடம் பிடித்தனர். சாதித்த மாணவ - மாணவியர், பயிற்சியாளர் சண்முகம் தலைமையில், நேற்று முன்தினம் சென்னை திரும்பினர். திருவொற்றியூர் தி.மு.க., மேற்கு பகுதி செயலர் அருள்தாசன் தலைமையில், பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை