உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல அஞ்சல் குறைதீர்வு தி.நகரில் வரும் 23ல் முகாம்

மண்டல அஞ்சல் குறைதீர்வு தி.நகரில் வரும் 23ல் முகாம்

சென்னை, அஞ்சல் துறையின் மண்டல அளவிலான குறைதீர்வு முகாம், தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 23ம் தேதி, காலை 11:00 மணிக்கு நடக்கிறது.இதில், பதிவு தபால், பார்சல், மணியார்டர், அனுப்புனர் மற்றும் பெறுனர் முகவரிகள் போன்ற தகவல்களுடன், புகார்களை இன்றைக்குள் அனுப்ப வேண்டும்.புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சலக பெயர் போன்ற தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.கீழ்நிலை அஞ்சலகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே, மண்டல அளவிலான குறைதீர்வு முகாமில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ