உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 168 புதிய கலை சொற்கள் ஏற்பு

168 புதிய கலை சொற்கள் ஏற்பு

சென்னை: செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் நேற்றைய கூட்டத்தில், 168 கலைச்சொற்கள் ஏற்கப்பட்டன.சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், 'தமிழ் கலைக்கழகம்' செயல்படுகிறது. இது, மக்களின் பேச்சு வழக்கு, ஊடக பயன்பாடு, புதிய துறைகளில் புழங்கும் பிறமொழி சொற்களுக்கு ஏற்ற, தமிழ் கலைச்சொற்களை உருவாக்குகிறது. அகரமுதலி இயக்கக இயக்குனர் பவானி தலைமையில், 163வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், 'லிதோகிராபி டெக்னிக் - கல்லச்சு நுட்பம்; மாக் ஸ்பீச் - பகடிப்பேச்சு; பிரஸ்டிஜிடேஷன் - மாய்மாலம்; யாப்பர் - அலப்பறைஞர்' உள்ளிட்ட, 168 சொற்களுக்கு நிகரான கலைச்சொற்கள் ஏற்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை