உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை; பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின், 19ம் ஆண்டுபட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர், சென்னை ஆரக்கிள் பிராக்டிஸ் எல்டிஐ மின்ட்டரீ குளோபல் ஹெட் நியூவின் துரை பேசுகையில், ''வளர்ந்து வரும் உலகில், அர்த்தமுள்ள சமூக மாற்றத்தை உருவாக்க அறிவை பெருக்கி, திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.2020- - 2024 கல்வியாண்டில் பயின்ற, பல்வேறு துறை சார்ந்த 325 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !