2 குழந்தைக்கு தொந்தரவு தந்தைக்கு 20 ஆண்டு சிறை
கோவை:கோவை மாநகர பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி, 45. இவர், அவரது 11 மற்றும் 9 வயது பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சி செய்தார். இதுகுறித்து, அந்த குழந்தைகள் பள்ளியில் தெரிவித்தனர். புகாரில், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சிறுமியரின் தந்தையை 2023, அக்., 13ல் கைது செய்தனர். கோவை முதன்மை போக்சோ நீதிபதி குலசேகரன், குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு, இரண்டு குழந்தைகளை அவர் சீரழித்ததால், தலா, 20 ஆண்டு சிறை என, இரண்டு முறை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.