உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, இரண்டு டன் ரேஷன் அரிசி, கார் மற்றும் இரண்டு ஆட்டோக்களை, குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆட்டோவை சோதனை செய்த போது, 1,050 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.ஆட்டோவை ஓட்டி வந்தது கோவை மாச்சநாயக்கன்பாளையம் ஜனார்த்தனன்,40, என்றும், ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளின் உரிமையாளர் சுந்தராபுரம் முத்தையா நகர் இமயநாதன்,44, என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.மேலும், கோவை - பாலக்காடு ரோடு மதுக்கரை மார்க்கெட் ராணுவ கேம்ப் அருகே ஆட்டோவில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஆம்னி காருக்கு மாற்றியவர்களை போலீசார் பிடித்தனர். ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வேலந்தாவளம் சுண்ணாம்புக்கல் ரோடு, அமல்லுார்பவம்,30, கோவை பீளமேடு லோகேஷ்,27 ஆகியோரை கைது செய்தனர். அவர்கள், கோவை பீளமேடு, காந்திபுரம் பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு ஜாகிர் உசேன்,45 என்பவருக்கு கள்ள சந்தையில் அதிக லாபத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, இருவரை கைது செய்தனர். மொத்தம், மூன்று வாகனங்கள், இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ