உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 22ல் மூத்தோர் தடகளப் போட்டிகள்

வரும் 22ல் மூத்தோர் தடகளப் போட்டிகள்

கோவை:கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோசியேஷன் (கே.டி.எம்.ஏ.ஏ.,) சார்பில், மூத்தோருக்கான தடகளப் போட்டிகள் வரும், 22ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கின்றன.போட்டிகளில், 30 முதல் 95 வயது வரையிலான ஆண்கள், பெண்கள், பங்கேற்கலாம். நடை போட்டிகள், ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.ஒருவர் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள், மாநில அளவில், நடக்கும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், வரும் 15ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கே.டி.எம்.ஏ.ஏ., சங்க செயலாளர் வேலுசாமி, 96887 55702, ஜெயலட்சுமி, 98408 59713 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ