மேலும் செய்திகள்
நூற்றாண்டு விழா ஆயத்த கூட்டம்
20-Feb-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழா ஆயத்த கூட்டம் நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட, கிணத்துக்கடவு மற்றும் வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் துவங்கப்பட்டு, நூறு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிகழ்வை கொண்டாட அந்தந்த பள்ளிகள் ஆயத்தமாகி வருகின்றன.இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நூற்றாண்டு விழாவுக்கான இரண்டாவது கட்ட, ஆயத்த கூட்டம் நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணம்மாள், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் கூறுகையில், 'நூற்றாண்டு விழாவில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, விளையாட்டு விழா மற்றும் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.
20-Feb-2025