உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விமான நிலையத்தை 30 லட்சம் பேர் பயன்படுத்துவர்

கோவை விமான நிலையத்தை 30 லட்சம் பேர் பயன்படுத்துவர்

கோவை : நடப்பு நிதியாண்டில், 30 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு, விமான நிறுவனங்கள் தங்களது சேவையை விரிவுபடுத்தியதால், கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.விமான நிலைய ஆணையத்தின் தரவுகளின் படி, 2022 - 23 நிதியாண்டில் உள்நாடு, 16 ஆயிரத்து 364, வெளிநாடு, 1,278 என, மொத்தம், 17 ஆயிரத்து, 642 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. சர்வதேசம், 1.94 லட்சம், உள்நாடு, 23.62 என, மொத்தம், 25.57 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.2023 - 24 நிதியாண்டில் உள்நாடு, 17 ஆயிரத்து 057, வெளிநாடு, 1,339 என, மொத்தம், 18 ஆயிரத்து, 396 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. சர்வதேசம், 2.11 லட்சம், உள்நாடு, 26.93 என, மொத்தம், 29.04 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.நடப்பு நிதியாண்டில்(ஜன., 31 வரை) உள்நாடு, 16 ஆயிரத்து 486, வெளிநாடு, 1,437 என, மொத்தம், 17 ஆயிரத்து, 923 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. சர்வதேசம், 2.15 லட்சம், உள்நாடு, 24.75 என, மொத்தம், 26.90 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.

சரக்கு போக்குவரத்து

2022 - 23 நிதியாண்டில், சர்வதேசம், 860, உள்நாடு, 7,521 என, மொத்தம், 8,381 மெட்ரிக் டன், 2023 - 24 நிதியாண்டில், சர்வதேசம், 949, உள்நாடு, 7,973 என, மொத்தம், 8,922 மெட்ரிக் டன், நடப்பு நிதியாண்டில், சர்வதேசம், 1,490, உள்நாடு, 8,642 என, மொத்தம், 10 ஆயிரத்து, 132 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில், கோவை சர்வதேச விமான நிலையத்தை, 30 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ