உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசார் பறிமுதல் செய்த 344 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு

போலீசார் பறிமுதல் செய்த 344 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு

போத்தனூர்;கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட போலீசார் பறிமுதல் செய்த, 344 கி.கிராம் கஞ்சா நேற்று அழிக்கப்பட்டது.கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட, எட்டு மாவட்டங்கள் மற்றும் மூன்று மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்போரை பிடித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டோரிடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கோர்ட் நடவடிக்கைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வகையில் பாதுகாக்கப்பட்ட, 344 கி. கிராம் கஞ்சாவை அழிக்க கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று காலை செட்டிபாளையத்திலிருந்து பல்லடம் செல்லும் சாலையிலுள்ள மருத்துவ கழிவை அழிக்கும் தொழிற்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன், கஞ்சா கொண்டு வரப்பட்டது. பின் அவை, கோவை டி.ஐ.ஜி., சரவணசுந்தர், எஸ்.பி.,பத்ரிநாராயணன், துணை கமிஷனர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் தீயில் கொட்டி முழுமையாக அழிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ