அக்கா திட்டத்தில் 492 மாணவியர் புகார்
கோவை:மாநகர போலீசின் 'போலீஸ் அக்கா' திட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஆக., மாதம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை மாநகர எல்லைக்குள் உள்ள, 70 கல்லுாகளில் சைபர் கிரைம் உதவி எண் 1930, பாலியல் வன்கொடுமைகள் பாதுகாக்க அவசர உதவி எண் 1098, 181, காவலன் ஆப் மற்றும் சிட்டிசன் 'போர்டல்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது வரை இத்திட்டத்தில் 492 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒன்பது புகார்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 51 புகார்களுக்கு சி.எஸ்.ஆர்., போடப்பட்டுள்ளது.