உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை;போக்சோ வழக்கில் சலவை தொழிலாளிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, போத்தனுார் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்,56. துணி தேய்க்கும் கடையில் சலவை தொழிலாளியாக வேலை செய்தார். கடந்த 2023, மே, 19ல், ஏழு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தார். புகாரின் பேரில், போத்தனுார் போலீசார் விசாரித்து, ரவிக்குமாரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு, ஐந்தாண்டு சிறை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா பேகம் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ