உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பயன்பாடு மாத்திரை 590 பறிமுதல்; ஒருவர் கைது

போதை பயன்பாடு மாத்திரை 590 பறிமுதல்; ஒருவர் கைது

போத்தனூர்; கோவையில் போதைக்கு பயன்படுத்தும், 590 மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.மலுமிச்சம்பட்டி பகுதியில் போதை ஊசி மருந்து, மாத்திரைகள் விற்கப்படுவதாக, செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரிடம் விசாரித்தார்.அவர் மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரை சேர்ந்த டிரைவர் பிச்சைபாண்டி, 25, என்பதும், விற்பனைக்காக, டெபண்டால் எனும் போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள், 590 வைத்திருப்பதும் தெரிந்தது. மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், பிச்சைபாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை