குழந்தையின் தனித்துவத்தை வளர்க்கும் தரமான பள்ளி
ஜி.ஆர்.ஜி., கல்விக் குழுமத்தின் அங்கமான, புளூஜெம்ஸ் மாண்டச்சேரி பள்ளி (Bluegems Montessori), ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை வளர்க்கும் கற்றலை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. குழந்தைகள் தங்கள் சொந்த வேகத்தில் ஆராயவும், கண்டறியவும், கற்றுக்கொள்ளவும், ஊக்குவிக்கும் சூழலை வழங்குகிறது.சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாண்டிசோரி பொருட்களுடன் கூடிய விசாலமான வகுப்பறைகள், ஆராய்ச்சி மற்றும் கற்றலுக்கான நுாலகம் மற்றும் வள மையம், படைப்பாற்றலை வளர்க்கும் கலை மற்றும் இசை ஸ்டுடியோக்கள், வெளிப்புற விளையாட்டுப் பகுதிகள் மற்றும் தோட்டங்கள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மற்றும் சான்றளிக்கப்பட்ட மாண்டிசோரி ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனத்திற்கான குறைந்த மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆகியவை முக்கியமானதாகும். குழந்தைகளின் பல்வேறு கட்ட வளர்ச்சிக்கேற்ப, 18 மாதங்கள் முதல் மூன்று வயது, மூன்று முதல் ஆறு வயது மற்றும் ஆறு முதல் 12 வயது என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அனுபவம் வாய்ந்த மற்றும் சான்றளிக்கப்பட்ட மாண்டிசோரி ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையின் தேவைகளையும் ஆர்வங்களையும் பூர்த்தி செய்கின்றனர்.