உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்மின்னழுத்த மின்கம்பத்தில் சிக்கிய தகர கூரையால் பரபரப்பு

உயர்மின்னழுத்த மின்கம்பத்தில் சிக்கிய தகர கூரையால் பரபரப்பு

கோவை: காற்றில் பறந்து வந்த தகரம், உயர் மின்னழுத்த கம்பத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மணியகாரன்பாளையம் ரோடு, கற்பகம் மில் உடையாம்பாளையம், காந்தி நகர், முருகன் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று மாலை இப்பகுதியில், காற்று பலமாக வீசியது. தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக, இப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில், போடப்பட்டிருந்த தகர கூரை பெயர்ந்து, காற்றில் பறந்து அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மின்சாரத்தை நிறுத்தி உடனடியாக தகரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ