மேலும் செய்திகள்
காவிரி நீரை மலர் துாவி வரவேற்ற பொதுமக்கள்
04-Aug-2024
பெ.நா.பாளையம்:கோவையை அடுத்த, துடியலூர் அருகே பன்னிமடை, தாளியூர் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணி அளவில் பெண் யானை ஒன்று குட்டியுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. அப்பகுதியில் இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஓடிய காட்டு யானைகள் தாளியூரை சேர்ந்த விவசாயிகள் மணி, ராஜகோபால், சுப்புராவ், தியாகராஜன் ஆகியோர் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு இருந்த வாழை, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. பின்னர் மலையடிவாரம் நோக்கி சென்றன.
04-Aug-2024