/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளம்பர விருப்பம் கே.எம்.சி.எச்., சார்பில் உயிர் காக்கும் பயிற்சி
விளம்பர விருப்பம் கே.எம்.சி.எச்., சார்பில் உயிர் காக்கும் பயிற்சி
கோவை:உலக முதலுதவி தினம் மற்றும் உலக இருதய தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதலுதவி பயிற்சி முகாம், ரேஸ்கோர்சில் நடந்தது.கே.எம்.சி.எச்., மருத்துவமனை மற்றும் கே.எம்.சி.எச்.,செவிலியர் கல்லுாரி இணைந்து நடத்திய நிகழ்வில், பொதுமக்களுக்கு செயல்விளக்கமும் அளித்தனர்.கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி கூறுகையில், ''ஒருவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், உடன் இருப்பவர்கள் சி.பி.ஆர்., செய்யும் போது, அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு, அதிக வாய்ப்பாக அமையும்,'' என்றார்.