உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அட்வைஸ்

கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அட்வைஸ்

வால்பாறை; கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், வால்பாறை நகர், முடீஸ் பஜார், சோலையாறுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு கோட்ட கலால் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்திசிலை வளாகத்தில் நடந்தது. வால்பாறை தாசில்தார் மோகன்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.உடுமலை ராணி கிராமிய கலைக்குழு சார்பில் நடைபெற்ற நிகழச்சியில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குடும்பம் சந்தோஷமாக இருக்கணும்னா... மது அருந்தக்கூடாது. கள்ளச்சாராயம் குடிப்பது உயிருக்கு ஆபத்தானது என, நடன நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை