உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த அறிவுரை

வாழையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த அறிவுரை

கிணத்துக்கடவு; வாழை இலை சுருண்டு வளைந்து, நோய் தாக்குதல் அடைவதை தடுக்க, வேளாண் பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், 150 ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டு தோறும் வாழை சாகுபடியாகிறது. இதில், வாழை இலை சுருண்டு வளைந்து நோய் தாக்குதல் ஏற்பட்டது போல் ஆங்காங்கே காணப்படுகிறது.இதை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார். இதில், சுண்ணாம்பு மற்றும் காப்பர் குறைவாக இருப்பதால், வாழை இலை சுருண்டு காணப்படும்.இதை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும். மேலும், காப்பர் சல்பேட் இரண்டு கிராமை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இலை சுருண்டிருப்பதை கட்டுப்படுத்தலாம், என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை