/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஜே.கே., கல்வி குழுமம் சார்பில் பெண்களுக்கான நெடுந்துார ஓட்டம்
ஏ.ஜே.கே., கல்வி குழுமம் சார்பில் பெண்களுக்கான நெடுந்துார ஓட்டம்
போத்தனூர்: கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே. கல்வி குழுமம் சார்பில், மகளிர் தினம் முன்னிட்டு, நெடுந்தூர ஓட்டம் நடந்தது.நேற்று காலை நவக்கரையில், ஏ.ஜே.கே., கல்வி குழும செயலாளர் அஜித்குமார் லால்மோகன், பேரூர் சரக டி.எஸ்.பி., சிவகுமார், மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், க.க.சாவடி போலீஸ் எஸ்.ஐ. கணேசமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, மகளிர் தின வாழ்த்துக்களை கூறினர்.ஐந்து கி.மீ., தூரத்தை கடந்த ஓட்டம், க.க.சாவடியில் முடிவடைந்தது. பெண்களின் பாதுகாப்பு உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்து, விழிப்புணர்வு டி -ஷர்ட் அணிந்து, ஏ.ஜே.கே.. கல்வி குழுமத்தின் கலை, அறிவியல் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவியர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், டி -ஷர்ட், புத்துணர்ச்சி பானம் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.