உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏப்ரல் மாத கட்டணமே போதும்

ஏப்ரல் மாத கட்டணமே போதும்

கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஒண்டிப்புதுார், காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யப்படாததால், ஏப்ரல் மாத கட்டணத்தையே செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒண்டிப்புதுார், காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட, வளியம்பாளையம், வீரியம்பாளையம் மற்றும் பாலாஜி நகரில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மின் நுகர்வோர், ஏப்ரல் மாத மின் கட்டணத்தையே, ஜூன் மாதத்துக்கும் செலுத்தலாம்.இத்தகவலை, ஒண்டிப்புத்துார் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை