உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய தடகளம்; மாணவியர் அசத்தல்

குறுமைய தடகளம்; மாணவியர் அசத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிழக்கு குறு மைய அளவிலான மாணவியர் தடகளப்போட்டி, சிறுக்களந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.போட்டி முடிவுகள் வருமாறு:3000 மீ., ஓட்டம் 17 வயது பிரிவில், விஸ்வதீப்தி சரண்யா முதலிடம், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி சுதா இரண்டாமிடம், விஸ்வதீப்தி சர்மிளா மூன்றாமிடம் பிடித்தனர். 19 வயது பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி பாரதி, மாரியம்மாள் பள்ளி பிரியதர்ஷினி, எஸ்.ஆர்.என்.வி., சவிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.800 மீ., ஒட்டம், 17 வயது பிரிவில், எஸ்.சி.எம்., அட்சயசித்ரா முதலிடம், மாரியம்மாள் பள்ளி வேதபவுத்ரா இரண்டாமிடம், எம்.எம்.எச்.எஸ்.எஸ்., அஸ்லின் மூன்றாமிடம். 19 வயது பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி காவ்யா முதலிடம், மாரியம்மாள் பள்ளி ஜனபிரியா இரண்டாமிடம், பழனிகவுண்டர் பள்ளி தர்ஷினி மூன்றாமிடம் பிடித்தனர்.600 மீ., ஓட்டம் 14 வயது பிரிவில், வடசித்துார் காவ்யஸ்ரீ முதலிடம், எஸ்.ஆர்.என்.வி., ஓவியஸ்ரீ இரண்டாமிடம், விஸ்வதீப்தி பள்ளி கிரிதில்யா மூன்றாமிடம் பிடித்தனர்.உயரம் தாண்டுதல், 14 வயது பிரிவில், கஞ்சம்பட்டி அரசு பள்ளி கிரிஜாஸ்ரீ முதலிடம், மாரியம்மாள் பள்ளி சாலினி இரண்டாமிடம், எஸ்.ஆர்.என்.வி., அஸ்வினி மூன்றாமிடம். 19 வயது பரிவில், ஏ.எம்.எஸ்., பவதாரணி முதலிடம், சாந்தி பள்ளி நந்திகாஸ்ரீ இரண்டாமிடம், மாரியம்மாள் பள்ளி பிரியதர்ஷினி மூன்றாமிடம் பிடித்தனர்.நீளம் தாண்டுதல், 14 வயது பிரிவில், மாரியம்மாள் பள்ளி தர்ஷினி முதலிடம், விஸ்வதீப்தி சஸ்மிதா இரண்டாமிடம், அன்னை அறிவகம் பள்ளி தர்ஷனா மூன்றாமிடம். 19 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., பூஜா முதலிடம், ஏ.எம்.எஸ்., பவதாரணி இரண்டாமிடம், வடசித்துார் மகாலட்சுமி மூன்றாமிடம் பிடித்தனர்.வட்டு எறிதல், 17 வயது பிரிவில், விஸ்வதீப்தி சுருதி முதலிடம், மாரியம்மாள் பள்ளி லோகபிரியா இரண்டாமிடம், எஸ்.ஆர்.என்.வி., சபரி மூன்றாமிடம். 19 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., செல்வமாலதி முதலிடம், மாரியம்மாள் பள்ளி தனுஷ்யா இரண்டாமிடம், வித்யஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தனர்.குண்டு எறிதல், 14 வயது பிரிவில், வெங்கிட்பிரபு பள்ளி விகாஷினி முதலிடம், ஏ.எம்.எஸ்., சினு இரண்டாமிடம், மாரியம்மாள் பள்ளி வருணா மூன்றாமிடம். 17 வயது பிரிவில், மாரியம்மாள் பள்ளி ஜெய்ஸ்ரீ முதலிடம், விஸ்வதீப்தி பள்ளி சுருதி இரண்டாமிடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை