உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை பாதுகாப்புக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இயற்கை பாதுகாப்புக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி;பூசாரிப்பட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'நேச்சர் கிளப்' சார்பில் 'உயிரியல் சூழல் மற்றும் அதற்கான இயற்கைப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். உதவிப்பேராசிரியர் ரகுபதி வரவேற்றார். கல்விசார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக, தாவரவியல் ஆய்வாளர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ''இவ்வுலகில், வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கையே நமக்கான ஆதாரம். பூமி நமக்கு மட்டும் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.மாணவ, மாணவியர் உட்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் இந்துரேகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை