உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூச்சமரத்தூர் சுற்றுலா மையத்தில் பேக்கேஜ் கட்டணம் நீக்கம்

பூச்சமரத்தூர் சுற்றுலா மையத்தில் பேக்கேஜ் கட்டணம் நீக்கம்

மேட்டுப்பாளையம்;பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா மையத்தில், பேக்கேஜ் கட்டணத்தை காரமடை வனத்துறை நீக்கி உள்ளனர்.காரமடையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அத்திக்கடவு அருகே பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறியதாவது:இந்த விடுதியில் தனி நபர் ஒருவருக்கு பேக்கேஜ் கட்டணமாக ரூ.2,300 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் அறை கட்டணம் ரூ.1,000, காலை நேர உணவு ரூ.200, மதிய உணவு ரூ.250, இரவு உணவு ரூ.250 ஆகியவை அடங்கும். தற்போது பேக்கேஜ் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதியில் அறை எடுத்து தங்குவோருக்கு ஒரு நபருக்கு ரூ.1,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. பரிசல் பயணத்திற்கு 4 பேர் பயணம் செய்ய ரூ.400 வசூலிக்கப்படுகிறது. சைவ, அசைவ, உணவுகளுக்கு தனியாக பழங்குடி மக்களிடம் கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் விடுதியில் தங்குவதற்கு www.coimbatorewilderness.comஇணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை