உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானைகளால் வாழை மரங்கள் சேதம்

காட்டு யானைகளால் வாழை மரங்கள் சேதம்

தொண்டாமுத்தூர்; தீத்திபாளையம் மற்றும் கரடிமடையில், காட்டு யானைகளால், வாழை மரங்கள் சேதம் அடைத்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட, கரடிமடை, குப்பனூர், தீத்திபாளையம், மத்திப்பாளையம் ஆகிய கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதியில், தென்னை, வாழை, தக்காளி போன்ற பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து, இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள், விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவதும், அங்குள்ள வீடுகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. காட்டு யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், காட்டு யானைகளால், விவசாய பயிர்களும், உடைமைகளும் சேதமடைவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தீத்திபாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தீத்திபாளையம், குப்பனூர், கரடிமடை பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து, நூற்றுக்கணக்கான வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !