மேலும் செய்திகள்
வார்டுகளில் வங்கி கணக்கு துவக்கம்
02-Sep-2024
சூலுார்;காடாம்பாடி அரசு துவக்கப்பள்ளி, மாணவ, மாணவியர், 200 பேருக்கு வங்கி சேமிப்பு கணக்கு துவக்கி பாஸ் புத்தகங்கள் வழங்கப்பட்டது. சூலுார் அடுத்த காடாம்பாடி ஊராட்சியில் உள்ள துவக்கப்பள்ளியில், 200 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, அடையாள அட்டையும், சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், வங்கி சேமிப்பு கணக்கு துவக்கி தர, ஊராட்சி தலைவர் இந்திராணி முடிவு செய்தார். மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் யூனியன் வங்கி சேமிப்பு பாஸ் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைவர் இந்திராணி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர், மாணவர்களின் வங்கி கணக்கில், தலா, 100 ரூபாய் வரவு வைத்து, பாஸ் புத்தகங்கள், அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.
02-Sep-2024